சரியில்லனா கிளம்பிவிடுவார்..ராதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி பட்டவரா?
நடிகை ராதிகா பல ஆண்டுகளை கடந்து இன்னும் சினிமாவில் நடித்து கலக்கி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து கலக்கி வந்த இவர் அடுத்ததாக சமீப காலமாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் மிகவும் மாடலாக இருப்பாராம். எனவே, அந்த சமயத்தில் எந்தெந்த உடைகள் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருந்த உடையை வாங்கி போடுவாராம். அந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருந்தவர் காசி என்பவர் தான்.
இவர் ராதிகா நடித்த பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதில் ராதிகாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசும்போது ராதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி விவரமாக கூறியுள்ளார். அதன்படி ராதிகா அந்த சமயம் மாடலாக இருந்த காரணத்தினால் படத்தில் நடிக்க மாடலான ட்ரஸ் தான் நடிக்க கேட்பாராம்.
அப்படி கொடுக்கவில்லை என்றால் படத்தில் நடிக்க்க மாட்டேன் என்று கூறிவிடுவாராம். அப்படி ட்ரஸ் கிடைக்கவில்லை என்றாலும் கூட தன்னிடம் இருக்கும் துணியை எடுத்து கொடுத்து இதே போலவே தைத்து கொடுங்கள் என்று கூறுவாராம். காஸ்டியூம் டிசைனரான காசியும் இரவு முழுக்க தைத்து கொடுப்பாராம்.
அப்படி தைத்து கொடுத்ததும் சரியில்லை என்றால் இரவு நேரங்களில் இந்த அளவு சரியில்லை என்று கூறுவாராம். ட்ரஸ் பிடிக்கவில்லை என்றால் அந்த நாளில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வரவில்லை என்று கூறிவிட்டு சென்று விடுவாராம். அப்படி பட்ட கோபம் குணம் கொண்டவர் தான் நடிகை ராதிகாவாம். இந்த தகவலை காசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் தொடர்ச்சியாக இப்படி மாடலான ட்ரஸ்களை கேட்டதால் தான் தன்னால் பல மாடல்களை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது எனவும் ஷங்கர் படத்திலேயே வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தாதாகவும் காஸ்டியூம் டிசைனரான காசி மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார.