கிறுக்கு தனமாக ஏதாவது பேசினா அடிச்சிட்டு ரெட் கார்ட் வாங்கிட்டு போயிருவேன்! பிரதீபுக்கு எச்சரிக்கை விடுத்த விசித்திரா!

Vichithra

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே போட்டியாளர்களின் குறள் ஓங்கி ஒளித்து வருகிறது. குறிப்பாக நேற்று வனிதா மகள் ஜோவிகா மற்றும் விசித்ரா ஆகியோருக்கு படிப்பை வைத்து வாக்கு வாதம் நடைபெற்றது. இந்த வாக்கு வாதத்தின் வீடியோவும் பெரிய அளவில் பகிரப்பட்டது.

விசித்ரா எழுத படிக்க தெரியவேண்டும். நீ தமிழ் எதாவது போய் எழுது பாப்போம் என்று ஜோவிகாவிடம் கூற அதற்கு ஜோவிகா எனக்கு தமிழ் தெரியாது என்னால் எழுத முடியாது என கறாராக பேசினார். படித்தால் தான் வாழ முடியும் என்று ஒண்ணுமே இல்லை எனவும் பேசி இருந்தார். இது இருவருக்கும் இடையே பெரிய வாக்கு வாதத்தை ஏற்படுத்திய நிலையில், விசித்ரா இந்த சம்பவத்தால் சற்று நொந்து பொய் இருக்கிறார்.

அவரிடம் பிரதீப் விளையாடி வந்த நிலையில் திடீரென விசித்ரா சற்று கடுப்பாகி இருக்கிறார். பிரதீப் என்னுடன் ஆடமாட்டீர்களா? என்று கேட்க அதற்கு விசித்ரா என்கிட்டே ரொம்ப ஓவராக பேசாதா  உன்னிடம் ஒன்றே ஒன்று மட்டும் நான் சொல்கிறேன் அடுத்த முறை எதாவது கிறுக்கு தனமா இப்படி பண்ணதா. இனிமேல் என்னிடம் கிறுக்கு தனமாக பேசினால் கண்டிப்பாக அடிச்சிருவேன்.

அடிச்சிட்டு ரெட் கார்ட் வாங்கிவிட்டு வெளியே போயிருவேன். வெளியே சென்றால் என்னை பார்த்துக்கொள்ள என்னுடைய கணவர் இருக்கிறார். நீ ஏதாவது பேசுவ நான் அமைதியாக இருப்பேன் என்று மட்டும் நீ நினைத்துக் கொள்ளாத நான் அமைதியாகவும் இருப்பேன் அழுகவும் செய்வேன். ரவுடியாகவும் பேசுவேன்.

என்னைப் பற்றி ஒழுங்காக முதலில் தெரிந்து கொள் இன்னொரு முறை நான் போகும் பொழுது என்னை பார்த்து சிரிப்பது உனக்கு வாயில் வந்தது என்னைப் பற்றி பேசுவது என ஏதாவது செய்தால் கண்டிப்பாக அடிச்சிடுவேன் என்று விசித்ரா  கூறுகிறார். அதற்கு சிரித்துக் கொண்டே அடிங்க அடிங்க என பிரதீப் நக்கலாக  பதில் பேசுகிறார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வரும் நிலையில் பிரதீப் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருங்க என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்