இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால்…ரகுவரன் மனைவி உருக்கம்.!

Default Image

வில்லனாக மட்டுமின்றி ஹீரோ, குணச்சித்திர வேடம் என எல்லா கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர் நடிகர் ரகுவரன். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி உடல் நல குறைவால் காலமானார். இன்று அவருடைய 15-வது நினைவு தினம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

Raghuvaran
Raghuvaran [Image Source : Google ]

இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு ரசிகர்கள் அவர் நடித்த படங்களின் சிறந்த காட்சிகளை சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள். இதனையடுத்து, ரகுவரனின் மனைவியும், நடிகையுமான ரோகிணி டிவிட் ஒன்றை செய்துள்ளார்.

கணவர் குறித்து ரோகிணி வெளியிட்டுள்ள டிவிட்டில் “மார்ச் 19, 2008 ஒரு சாதாரண நாளாகத் தொடங்கியது, ஆனால் எனக்கும் ரிஷிக்கும் எல்லாவற்றையும் மாற்றியது. “ரகு உயிரோடு இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார்; மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்” என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Sai Rishivaran
Sai Rishivaran [Image Source : Google ]

மேலும், மறைந்த நடிகர் சாய் ரிஷிவரன் என்ற மகன் இருக்கிறார். அவருடைய பெயரை தான் ரோகிணி ரிஷி என குறிப்பிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்