ஐஸ்வர்யா மேனன் : ஹைவே படத்தில் அலியா பட் நடித்த கதாபாத்திரத்தை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நான் சிரித்தாள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் கடைசியாக வேழம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அப்டியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.
தெலுங்கில் கடைசியாக ஸ்பை என்கிற படத்திலும் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பஜே வாயு வேகம் என்கிற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் சூழலில், படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகை ஐஸ்வர்யா மேனன் பேட்டியளித்தார்.
அப்போது தனக்கு நடிக்க விருப்பமான கதாபாத்திரம் பற்றியும் நடிகை ஐஸ்வர்யா மேனன் பேசியுள்ளார் இது குறித்து பேசிய ஐஸ்வர்யா மேனன் ” எனக்கு பல மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஹைவே படத்தில் அலியா பட் நடித்த கதாபாத்திரத்தை போல நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது.
அந்த மாதிரி கதையம்சத்தை கொண்ட படம் என்னிடம் வந்தது என்றால் கண்டிப்பாக நான் மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுப்பேன். தற்போது நான் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து முடித்து இருக்கிறேன். மற்றோரு படத்திலும் நடித்து கொண்டு இருக்கிறேன். அதைப்போல, தமிழிலும் ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன் ” எனவும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…