‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார்.
![[File Image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Idlykadai-arun-vijay.webp)
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் “ராயன்” படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்போது, இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரும என்று படக்குழு அறிவித்துள்ளனர்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’யுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அஜித் மற்றும் தனுஷ் இடையேயான முதல் பாக்ஸ் ஆபிஸ் மோதலை தவிர்ப்பதற்காக ‘இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதியுடன் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பதை சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுத, அருண் விஜய் குத்து சண்டை வீரராகவும் தனுஷ் அதற்கு ஆசானாகவும் அல்லது அண்ணனாகவும் இருப்பதாக தெரிகிறது.
Great to work with such a hardworking, dedicated and sincere actor @arunvijayno1 brother #Idlykadai pic.twitter.com/y0W2NnWpiF
— Dhanush (@dhanushkraja) February 1, 2025
மேலும் இந்த படத்தில் நித்யா மேனன் , பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே , ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரு நல்ல கிராமப்புறக் கதையை விவரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தனுஷ் இயக்கிய மூன்றாவது படமான ‘ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ‘ பிப்ரவரி 21 அன்று வெளியாக உள்ளது. இதன் மூலம் இந்த மாதம் தனுஷ் இயக்கத்தில் இரண்டு திரைப்படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.