ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்து உருவாகி வரும்"இட்லி கடை" திரைப்படத்தின் புது போஸ்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி உள்ளன.

Idly Kadai First Look

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். இதில், நிலவு என்மேல் ஏனாதி கோபம் பிப்ரவரி ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அவர் இயக்கி வரும் மூன்றாவது படமான இட்லி கடையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

ஃபர்ஸ்ட் லுக்கில் ராஜ்கிரணுடன் இளைஞராக ஒரு லுக், நடுத்தர வயதில் ஒரு லுக் என தனுஷ் சிறப்பாக இருக்கிறார். மேலும் அந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 10 என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

தனுஷின் முதல் இயக்கமான பா.பாண்டியில் ராஜ் கிரண் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த படத்தில் தனுஷ் அவருடன் திரையில் வரவில்லை என்றாலும், இட்லி கடையில் இரு நடிகர்களுக்கும் சில  காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஃபீல்-குட் குடும்ப நாடகம் என்று சொல்லப்படும் இந்தத் திரைப்படதுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இந்த படத்தை வுண்டர்பார் பிக்சர்ஸுடன் இணைந்து டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்