கல்யாணம் ஆகலனா தனுஷை கல்யாணம் பண்ணி இருப்பேன்…மனம் திறந்த ரேகா நாயர்.!!
நடிகர் தனுஷிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே சினிமாத்துறையில் இருக்கும் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தனுஷின் தீவிர ரசிகர்கள் என்று கூட கூறலாம். இதனை அந்த பிரபலன்களே பல பேட்டிகளில் கூறியிருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில், இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மிகப்பெரிய தனுஷ் ரசிகை என்றும், கல்யாணம் ஆகலனா தனுஷை கல்யாணம் பண்ணி இருப்பேன் எனவும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை ரேகா நாயர் ” எனக்கு பிடித்த நடிகர் என்றால் தனுஷ் தான். கல்யாணம் ஆகவில்லை என்றால் தனுஷை கல்யாணம் பண்ணி இருப்பேன். எனக்கு அந்த அளவிற்கு தனுஷை ரொம்ப பிடிக்கும். சமீபத்தில் கூட நான் அவரை சந்தித்தேன்.
அவரிடம் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறினேன். ஆனால் அவரிடம் இதை பலரும் கூறியிருப்பார்கள். ஆனால் நான் பிடிக்கும் சொன்னதற்கான மதிப்பு ( value) யாருக்கும் தெரியாது. காதல் என்பதை நாம் நமது மனதிற்குள்ளே வைத்து கொள்ளலாம்” என கூறியுள்ளார்.
மேலும், நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். விரைவில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.