சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் எனது கணவருக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் : நடிகை சமந்தா
நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நாகசைதான்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், என்னால் என் கணவர் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் எனது கணவருக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். குழந்தை குறித்து இப்பொது நாங்கள் யோசிக்கவில்லை. எனது கணவருக்கு நான் முதல் மனைவி என்று சொல்ல முடியாது.
ஏன்னென்றால், அவர் எப்போதும் தூங்கும் போதும் தலையணையை கட்டியணைத்தபடி தான் தூங்குவார். எப்போதும் எங்களுக்கு இடையில் தலையணை இருக்கும். அவரை முத்தமிட வேண்டும் என்றால் கூட தலையணையை கேட்க வேண்டிதான் இருக்கும் என்றும், இந்த தலையணை பிரச்னை குறித்து நான் நிறைய சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலும் சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.