நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்! என்னோட முடிவை வச்சி யாரும் என்ன ஜட்ஜ் பண்ண கூடாது! அஜித் பட நடிகை அதிரடி!
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் விக்ரம் வேதா, நேர்கொண்ட பாராவை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறையை பற்றிய பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், அதிகமானோர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறை என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதுக்கு அணுகுறதும் கூட வன்முறையைத்தான் என கூறியுள்ளார். பாலியல் வான்முறை பற்றிய பிரச்சனைகள் சீக்கிரம் மாறிடும்னு நம்புறேன். காலந்தோறும் பெண்கள் மாறியிருக்காங்க. ஆனால், பெண்கள் பற்றிய பார்வை மட்டும் மாறவேயில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர், கூறுகையில், என் தாத்தா பாட்டி 15 குழந்தைகள் பெற்றார்கள். எங்க அம்மா அப்பாவுக்கு ரெண்டு குழந்தைகள். நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன். என்னோட முடிவை வச்சி யாரும் ஜட்ச் பண்ண கூடாது என கூறியுள்ளார்.