குக் வித் கோமாளிக்கு இனிமேல் வரமாட்டேன்…ஷிவாங்கி கூறிய அதிர்ச்சி தகவல்.!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்து 4-வது சீசன் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக கோமாளியாக கடந்த சீசன்களில் கலக்கி வந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்-ஆகா களமிறங்கியுள்ளார். வாரம் வாரம் அசத்தலாக சமையல் செய்து நடுவர்களிடம் நல்ல பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, மணிமேகலை தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார்.
View this post on Instagram
இப்போது, நடந்து கொண்டிருக்கும் சீசன் தான் தனது கடைசி சீசன் என்றும், அடுத்த சீசனில் இருந்து நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார் என்றும் ஷிவாங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவாங்கி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ” குக்-ஆக கலக்கி வருகிறீர்கள்..எப்போது கோமாளியாக திரும்ப வருவீர்கள்..?” என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த ஷிவாங்கி “இது எனது கடைசி குக் வித் கோமாளி சீசன். நான் எனது சிறந்ததை வழங்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார். மற்றோருவர் “பாடகராக சமையல்காரராக,கோமாளியாக, கலக்கி விட்டீர்கள் உங்களின் அடுத்த அவதாரம் என்ன….? என்று கேட்டுள்ளார்.
அதற்கும் பதில் அளித்துள்ள ஷிவாங்கி ” அது எல்லாம் பற்றி யோசனை இல்லை. எதிர்காலம் என்ன என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறியுள்ளார். அடுத்த சீசன் குக்வித் கோமாளியில் ஷிவாங்கி வரமாட்டார் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.