சினிமாவை விட்டு விலகி இருப்பேன்… நடிகை தேவயானி கூறிய அதிர்ச்சி தகவல்.!!
ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை தேவயானி தற்போது பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் தற்போது சில படங்களில் துணை கதாபாத்திரத்திலும், சில சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் சினிமா வகையில் சினிமாவை விட்டு விலகி இருப்பேன் என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை தேவையணி அஜித்துடன் நடித்த ‘காதல் கோட்டை’ திரைப்படம் தான் எனக்கு மறுவாழ்வு கொடுத்த ஒரு திரைப்படம். அந்த சமயத்தில் எனக்கு சுத்தமாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அப்போது தான் காதல் கோட்டை படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.
இந்த திரைப்படம் மட்டும் ஓடவில்லை என்றால் நான் கண்டிப்பாக சினிமாவைவிட்டு விலகிவிடுவோம் என்று நினைத்தேன். அந்த படத்திற்காக கடினமாக நான் உழைத்தேன். கண்டிப்பாக இந்த படம் வெற்றிபெறவேண்டும் என்றும் நினைத்தேன்.
ஆனால், நினைத்ததைவிட, அந்த படம் பெரிய ஹிட் ஆனதால், அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் வந்தது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் நடிகை தேவயானி தற்போது அனுராகம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.