ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்- மகேஷ் பாபு.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது .
அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது குறித்து சில விஷயங்களை கூறியதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பேசிய அவர் ” எனக்கு பான் இந்தியா நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்ற ஆசை துளி கூட கிடையாது. நான் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்களும், மற்ற திரைப்படங்களும் நாடு முழுவதும் ரசிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.
எனக்கு இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், நான் ஒருபோதும் இந்தியில் நடிக்க மாட்டேன். எனக்கு ஏற்ற சம்பளத்தை பாலிவுட்டால் கொடுக்க முடியாது. அதனால் இந்தி படங்களில் நடித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை”. என கூறியுள்ளார்.