விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தளபதி 66 படத்தின் பாடல்கள் குறித்தும் விஜய்யுடன் பணியாற்றுவது குறித்து இசையமைப்பாளர் தமன் சமீபத்திய பிரத்தியேக பேட்டி என்று சில சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தளபதி 66 படம் ஒரு சிறந்த கதை. விஜய் சார் ஒரு அற்புதமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். விஜய் சாரை பற்றி நான் எவ்வளவு உயர்வாக நினைக்கிறோனோ அது தளபதி 66 படத்தின் பாடல்களில் வெளிப்படும். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகாமல் நான் விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…