டிக்கியை திறக்கவே மாட்டேன்! வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்

Nivetha Pethuraj

நிவேதா பெத்துராஜ் : நடிகை நிவேதா பெத்துராஜ் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத்தமிழன், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது படங்களில் பிசியாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறைனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. வீடியோவை பார்த்த பலரும் ப்ரோமோஷனுக்காக இப்படியா அல்லது உண்மையில் நடந்த சம்பவமா என்று குழம்பி போய் இருக்கிறார்கள்.

வீடியோவால் சீட் பெல்ட் போட்டு கொண்டு காரில் நிவேதா பெத்துராஜ் இருக்கிறார். அப்போது அவரை நிறுத்தி காரின் டிக்கியை திறக்கவேண்டும் என்று போலீஸ் கூறுகிறார்கள். அதற்கு இல்லை அதை திறக்கமாட்டேன் என்பது போல கூறிவிட்டு என்னிடம் பேப்பர் எல்லாம் சரியாக தானே இருக்கிறது என்பது போல கேட்கிறார்.

அவர் டிக்கியை திறக்கமாட்டேன் என்று கூறியவுடன் காவல்துறையினருக்கு சற்று சந்தேகம் அதிகரிக்க டிக்கியை திறங்கள் என்று கூறுகிறார்கள். இதனால் கடுப்பான நிவேதா பெத்துராஜ் போலீசாருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். அத்துடன் வீடியோவை பதிவு செய்தவருடம் போனை பிடிங்கவும் முயற்சி செய்தார்.

இருப்பினும், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வீடியோவில் போலீஸ் உடை அணிந்து இருப்பவர்கள் ஷூ போடவில்லை என்பதால் கண்டிப்பாக இது போலியான போலீஸ் என்றும் கண்டிப்பாக இது எதோ ஒரு படத்தினுடைய ப்ரோமோஷன் தான் ப்ரோமோஷனுக்காக இப்படியா செய்வீர்கள்? என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்