தமிழ் சினிமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்.
இவரிடம் சமீபத்தில் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் -2 ஆகிய தென்னிந்திய திரைப்படங்களுக்கு சமீபத்தில் வட இந்தியாவிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த நவாசுதீன் ” பொதுவாக நான் இதுவரை தென்னிந்திய திரைப்படங்களை பார்த்ததே கிடையாது. அதனால், தென்னிந்திய திரையுலகம் குறித்த கேள்விக்கு நான் பதில் கூறுவது சரியாக இருக்காது. ஆனால் என்னால் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லமுடியும்.
ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால் சிறிது காலத்துக்கு மக்கள் அந்த படத்தை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். படத்தின் கதை, திரைக்கதைகளின் தாக்கத்தில் பல படங்கள் வெளியாகும். இதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது” என தெரிவித்துள்ளார். மேலும், இவர் பேசியது சர்ச்சயை கிளப்பியுள்ள நிலையில், தென்னிந்திய படங்களே பார்க்காத ஒருவர் ரஜினியுடன் பேட்டை படத்தில் எதற்காக நடித்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…