மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் – தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி.!
விழுப்புரம் : நீண்ட நாள்களாகவே அரசியலுக்கு வருவேன் எனக் கூறிக்கொண்டிருந்த நடிகர் தாடி பாலாஜி, மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் எனக் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்த பள்ளியில் நடிகர் தாடி பாலாஜி, 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை பரிசாக வழங்கினார்.
பின்னர், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “என்னால் முடிந்ததை பள்ளிக்கு செய்தேன், அரசுப்பள்ளிகள் தற்போது சிறப்பான பள்ளிகளாக உள்ளது. நானும் அரசுப்பள்ளியில் தான் பயின்றேன்” என்றார்.
அவரிடம் நடிகர்கள் எல்லாரும் அரசியலுக்கு வருகிறார்கள் நீங்களும் வருவீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த தாடி பாலாஜி, “நீங்க சொன்னா அரசியலுக்கு வருவேன் “பாலாஜி மக்களுக்கு நல்லது செய்வார் என மக்கள் நினைத்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலுக்கு வருவேன்” என்றார்.
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு, “இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். மேலும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், அவர் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்பது தான் முக்கியம் என்றார். மு
முன்னதாக, தளபதி விஜய் எந்த நல்ல விஷயம் பண்ணாலும் அங்க தாடி பாலாஜி இருப்பேன். மக்களுக்கு எந்த கட்சி நல்லது பண்ணுதோ அந்த கட்சியோட பயணிக்க தயார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.