விஜய்க்காக அதை கூட பண்ணுவேன்! அரங்கத்தை அதிர வைத்த மிஷ்கின்!
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்திற்கான வெற்றி விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், த்ரிஷா,லோகேஷ் கனகராஜ், மிஸ்கின், சாண்டி, மடோனா, அர்ஜுன், கௌதமேனன், ரத்னகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
லியோ படம் வெளியாவதற்கு முன்பே சில காரணங்களால் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே இதன் காரணமாக ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதையை கூற முடியவில்லை. இதனையடுத்து, நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் நடிகர் விஜய் அனைவருக்கும் தன்னுடைய குட்டி கதையும் கூறி உற்சாகப்படுத்தினார்.
இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!
அதைப்போல, இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் விஜய் பற்றி புகழ்ந்து பேசினார்கள். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் விஜய்காக தன்னுடைய நெஞ்சை அறுத்து கூட கொடுப்பேன் என்று பேசி இருக்கிறார். விழாவில் பேசிய அவர் ” நான் கேள்வி பட்டவரை திரையுலகில் இரண்டு லெஜண்ட்கள் இருக்கிறார்கள். ஒன்று மைக்கேல் ஜாக்சன் மற்றோருவர் ப்ரூஸ் லீ நான் கண்ணால் பார்த்த ஒரு லெஜண்ட் என்றால் விஜய் தான்.
விஜய் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் நான் பார்க்கிறேன். இன்னும் இளமையாக இருக்கிறார். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் விஜயின் அன்பு எப்போதும் மாறவே மாறாது. குறிப்பாக இதனை சொல்ல காரணம் லியோ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் நான் 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யை சந்தித்தேன். என்னை பார்த்தவுடன் அண்ணா என்று என்னை அணைத்து கொண்டார்.
இதே போல தான் என் மீது 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்பும் மரியாதையையும் வைத்திருந்தார். அதே அன்பு மாறாமல் 20 வருடங்களுக்கு பிறகும் அவர் இருப்பது சாதாரண விஷயம் இல்லை. விஜய் இந்த அளவிற்கு உயர ஒரு துளி கூட லக்கு இல்லை எல்லாமே அவருடைய உழைப்பு தான். அந்த அளவிற்கு கடினமாக உழைத்து அவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்” எனவும் விஜய் பற்றி மிஷ்கின் பாராட்டி பேசியுள்ளார். இவர் பாராட்டி பேசியவுடன் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கரோகோஷமிட்டனர்.