நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குஷி’ படத்தின் வெற்றியில் மூழ்கி இருக்கிறார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இது அவரது முதல் வெற்றியாகும், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் முழு காதல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘குஷி’ படம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியாகி உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த குஷி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தின் அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, பேசிய விஜய் தேவரகொண்டா, தனது சம்பளத்தில் இருந்து 100 ஏழை குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார். அதாவது, 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி செய்வதாக கூறினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “நான் சந்தோஷமா இருக்கேன், நான் எதையாவது செய்ய யோசிக்கிறேன், அது சரியா தவறா என்று தெரியவில்லை. எனது ‘குஷி’திரைப்பட சம்பளத்தில் இருந்து ரூ.1 கோடியை 100 குடும்பங்களுக்கு வழங்குகிறேன். தேவைப்படும் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் தலா ரூ.1 லட்சம் காசோலையாக வழங்குவேன்” என்றார்.
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு…
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…
திண்டுக்கல் : இந்து கடவுள் முருக பெருமானுக்கு முதன்மையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக உள்ள தைப்பூசத் திருவிழா ஆண்டு…