நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘உழவன்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சுந்தர புருஷன், சிவசக்தி,தர்ம சக்கரம், ராசி, அடிமை சங்கிலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 90 காலகட்டத்தில் எல்லாம் நடிகை ரம்பாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று கூட கூறலாம்.
குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்ததால் இவரை ” தொடை அழகி” என ரசிகர்கள் பெயர் கொடுத்தனர். தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த ரம்பா திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகினார் என்றே கூறலாம்.
கடந்த 2010-ஆம் ஆண்டு தான் நடிகை ரம்பா இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்னதாக அவர் கடைசியாக நடித்த திரைப்படம் என்றால், பென் சிங்கம் தான். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த திரைப்படத்திலும் அவர் நடிக்கவே இல்லை அவர் மீண்டும் ஒரு படத்திலாவது நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அந்த வகையில் நடிகை ரம்பா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் ரீ-எண்டரி கொடுக்கவுள்ளாராம். இதனை அவரே பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார். சினிமாவில் மீண்டும் வருவது குறித்து பேசிய நடிகை ரம்பா ” சினிமாவில் நான் பல ஆண்டுகள் நடிக்காமல் இருக்கலாம் ஆனால், சினிமாவை கவனிக்காமல் எல்லாம் இல்லை.
தொடர்ந்து நான் சினிமாவை கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது சினிமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. எனவே, என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்வு செய்து நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். எனவே என்னுடைய ரசிகர்கள் என்னை விரைவில் மீண்டும் திரையில் பார்க்கலாம்” என கூறியுள்ளார். மீண்டும் ரம்பா சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் அவருடைய ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…