சென்னை : அந்த நடிகர் படம் என்றால் சம்பளம் கூட வாங்காமல் நடிப்பேன் என பிரபல நடிகர் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி தான் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் சம்பளம் வாங்காமல் எந்த ஹீரோ கூட நடிப்பீர்கள்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு சிரித்த முகத்துடன் பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் ‘ நடிகர் நானியின் புகைப்படத்தை காண்பித்து இவருடைய படம் என்றால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய, கீர்த்தி சுரேஷ் எனக்கும் நானிக்கும் இடையேயான நட்பு மிக சிறந்தது. அவரை போல, நல்ல நண்பர் கிடைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என நெகிழ்ச்சி பட தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் நானியுடன் நடித்த நேனு லோக்கல், தசரா இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்று இவர்களுடைய கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நானியை சந்தித்தபோது கூட அந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து மூன்றாவதாக நாம் சேர்ந்து நடிக்க வேண்டும். அந்த படம் நமக்கு ஹட்ரிக் வெற்றியடைய வேண்டும் என நானியிடன் தான் சொன்னதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.
நேனு லோக்கல், தசரா இரண்டு வெவ்வேறு கதைக்களம் கொண்ட படம் என்பதால் இது போன்று இல்லாமல் வித்தியாசமான ஒரு கதையில் இருவரும் சேர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், மீண்டும் நானியுடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் எனவும், அந்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.
சம்பளம் கூட இல்லாமல் நானி கூட நடிப்பேன் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளது அவர் மீது வைத்துள்ள அன்பை எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது. மேலும், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…