“இன்று கோவிலுக்கு சென்றேன்”…உலக நாயகன் கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற கவின்.!
நடிகர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் கவின் நெகிழ்ச்சியுடன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
டாடா
கவின்,அபர்ணா டாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ” டாடா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ளார்.
டாடா படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்தில் சில எமோஷனல் காட்சிகள் நம்மளை அழ வைத்து விடுகிறது எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனை சந்தித்த கவின்
டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசனை நடிகர் கவின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதற்கான புகைப்படங்களையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Went to temple today 🙂 @ikamalhaasan sir ????????????????????????♥️ pic.twitter.com/Oz6A62Wp4s
— Kavin (@Kavin_m_0431) February 11, 2023
இது தொடர்பாக நடிகர் கவின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது ” “இன்று கோவிலுக்கு சென்றேன்”. என பதிவிட்டுள்ளார். எனவே படத்தை கண்டிப்பாக கமல்ஹாசன் பார்த்திருப்பார் என தெரிகிறது. மேலும், கமல்ஹாசனை கவின் சந்தித்துள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.