sivakarthikeyan soori [FIle Image]
சென்னை : சூரியை ஹீரோவாக நடிக்க சொன்ன முதல் ஆள் நான்தான் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கலக்கி வந்த நடிகர் சூரி ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே, அவர் ஹீரோவாக நடித்த விடுதலை படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக இய்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கருடன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ரேவதி சர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ” சூரி எனக்கு அண்ணன் நான் அவருக்கு தம்பி.
எனக்கு அண்ணனை ரொம்ப வருடமாக தெரியும். அவரை ஹீரோவாக படத்தில் நடிக்க சொன்னது நான் தான். சீமராஜா படத்தில் அவருடன் எனக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் நான் சொன்னேன் அண்ணா நீங்கள் இந்த மாதிரி ஒரு கதையை தேர்வு செய்து ஹீரோவாக படத்தில் நடிங்க என்று நான் சொன்னேன். அவர் முதலில் ஒற்றுக்கொள்ளாமல் நான் எப்படி ஹீரோ என்று சிரித்தார்.
பிறகு அவரே என்னிடம் வந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று சொன்னார். எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இனிமேல் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற உறுதியுடன் சூரி அண்ணன் இருக்கிறார். விடுதலை படத்தை போல கருடன் வெற்றியடைய வாழ்த்துக்கள்” எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…