“விஜயை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது”- டிராகன் இயக்குநர் நெகிழ்ச்சிப் பதிவு.!

விஜயை சந்தித்து டிராகன் படத்திற்கு வாழ்த்து பெற்றது குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Vijay - Ashwath Marimuthu

சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘டிராகன்’ திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்தது.

பிரதீப் ரங்கநாதன், கயாது லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கீழ், கலாபதி எஸ் அகோரம், கலாபதி எஸ் கணேஷ் மற்றும் கலாபதி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் முன்பு தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, டிராகன் படக்குழுவை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். என்னதான் விஜய் தனது பரபரப்பான செட்யூலில் இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு டிராகன் படக்குழுவைச் சந்தித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில், படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதற்காக விஜய் வாழ்த்தினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, டிராகன் இயக்குனர் அஸ்வின் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவில், “என் நண்பர்களுக்கு தெரியும், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணும்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயும் உழைப்பாலயும் மட்டும் அவரை சந்திக்கணும், ஒரு நாள் அவரோட வேலை செய்யணும்னு நினைச்சேன்.

வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேர் எதிரா உட்கார்ந்துட்டேன். விஜயை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. ஏனென்றால் அவரை அவ்வளவு பிடிக்கும்.. எவ்ளோ?? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. நல்லா எழுதி இருக்கீங்க ப்ரோ-னு அவர் சொன்னது சந்தோஷம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja