‘பலமுறை இப்படி நடந்துக்கிட்டாரு..இயக்குனருக்கு அடிமையா இருந்தேன்’…நடிகை சௌமியா கண்ணீர்!!

ஒரு வருடம் இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்தேன் என நடிகை சௌமியா வேதனையுடன் கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Sowmya

சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர்.  நடிகைகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக,பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள ஒரு பெயர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை சௌமியா தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சௌமியா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த வேதனையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு யூடியூப் சேனல் வாயிலாக அளித்த பேட்டியில் அவர் பேசும் போது “எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கல்லூரி படித்த காலகட்டத்தில் தான் வந்தது.

அந்த சமயம் இயக்குனர் ஒருவர் என்னுடைய பெற்றோர்களை சந்தித்து பேசி என்னை படத்தில் நடிக்க அணுகினார். என்னுடைய வீட்டிலும் என்னை நடிக்க செல் என்று கட்டாயப்படுத்தினார்கள். நானும் பிறகு நடிக்க சென்றேன். பிறகு இவ்வளவு மோசமாக இருக்குமா என்பதை அந்த இயக்குனர் செய்த செயல்களை பார்த்து புரிந்துகொண்டேன்.

அவருடைய படத்தில் நடிப்பதால் கிட்டத்தட்ட நான் 1 வருடங்களாக அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். ஒரு முறை அவருடைய மனைவி வீட்டில் இல்லாத போது நான் அவருடைய மகள் மாதிரி என கூறி என்னிடம் அவதூறான செயல்களை செய்ய முயற்சி செய்தார். அந்த நேரத்தில் இதனை யாரிடம் சொல்ல எப்படி சொல்ல என்று தெரியாத காரணத்தால் நான் சொல்லவில்லை.

வெளியே சொல்ல ரொம்ப பயமாக இருந்த காரணத்தால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அவரிடம் நடிக்கவும் செய்தேன். பிறகு, இதனை ஒரு காரணமாக வைத்து அவர் எனக்கு பலமுறை பாலியல் தொல்லைகொடுத்தார். ஒரு வருடம் இந்த வேதனைகளை அனுபவித்தேன்” என கண்ணீரை மறைத்துக்கொண்டு சௌமியா பேசினார். அது மட்டுமின்றி தனக்கு தொல்லை கொடுத்த அந்த இயக்குனர் பெயர் ஹேமா கமிட்டி அறிக்கையில் இருப்பதாகவும் சௌமியா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்