நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டு அந்த படத்தின் வாய்ப்பு தற்போது பிராசாந்த்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த படம் எதுவென்றால், தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படம் தான். இந்த திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, சமுத்திரக்கனி, ஊர்வசி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
அந்தகன் டப்பிங் பணியில் பிரியா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது. இந்த திரைப்படம் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “அந்தாதுன்” படத்தின் தமிழ் ரீமேக். இந்த படம் இந்தியில் பெரிய வெற்றியைபெற்ற நிலையில், தனுஷ் இந்த திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என ஆசைபட்டாராம்.
ஆசைப்பட்டு கலைப்புலி தாணுவிடம் பேசினாராம். இந்த படத்தை நாம் தமிழில் எடுக்கலாம் என்று கூற உடனடியாக கலைப்புலி தாணுவும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். பிறகு “அந்தாதுன்” படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் படத்தின் ரைட்ஸ் கேட்டபோது 5 கோடிகளுக்கு பேசப்பட்டதாம். பின் அந்த தயாரிப்பு நிறுவனம் படத்தில் இருந்து வரும் லாபத்தை 25 % கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டார்களாம்.
இதனால் கலைப்புலி தாணு மிகவும் கடுப்பாகி தனுஷிடம் லாபத்தில் 25 % கேட்கிறார்கள் வேண்டாம் என்று கூறினாராம். அதற்கு தனுஷும் அப்படியா அப்போ வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதற்கு பிறகு அதற்கு பதிலாக தான் தனுஷ் கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் படத்தில் நடித்து கொடுத்தாராம். இந்த தகவலை தாணுவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், ‘அந்தகன்’ படத்தை கலைப்புலி தாணு தான் தமிழகத்தில் விநியோகம் செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…