தனுஷ் கிட்ட கதை சொல்லிருக்கேன்! டிராகன் இயக்குநர் சொன்ன சீக்ரெட்!
தனுஷிடம் லவ், காமெடி, த்ரில்லர் கலந்த கதை ஒன்றை கூறியதாக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அந்த படம் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக மாறி உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த சூழலில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க உள்ளதால் அந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அஸ்வந்த் மாரிமுத்து நான் விஜய் ரசிகராக இருந்தாலும் மற்ற நடிகர்களின் படத்தை இயக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன் என பேசி இருக்கிறார்.
அது மட்டுமின்றி தனுசிடமும் ஒரு கதை கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “நான் சிம்பு படத்தை இயக்குவதால் எனக்கு தனுஷ் சார் பிடிக்காது என்று கிடையாது எனக்கு தனுஷ் சார் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அவரிடமும் ஒரு கதையை சொல்லி இருக்கிறேன்.
அந்த கதை லவ், காமெடி, திரில்லர் போன்ற கதை அம்சம் கொண்டது. இந்த கதையை அவரிடம் கூறியிருக்கிறேன். இந்த படம் இப்போது வேணாம் என்பது போல சொன்னார். சில காரணங்களால் பேச்சுவார்த்தையில் இருந்தது” எனவும் அஸ்வந்த் மாரிமுத்து தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சிம்பு படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்தின் வேலைகளை தொடங்குவார்கள் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.