வி.ஜே.கதிரவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் போட்டியில் ஷிவின் வெற்றி பெறவேண்டும் என நினைத்தாக கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.ஜே.கதிரவன்
தொலைக்காட்சிகளில் VJ-ஆக கலக்கி வந்த கதிரவன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கென்று பெண் ரசிகைகள் மட்டுமே அதிகமாகவிட்டார்கள்.
ஆனாலும், கதிரவன் பிக் பாஸ் போட்டியில் இறுதிபோட்டிக்கு வருவார் எனவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்போட்டியில் ஒரு பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த பணப்பெட்டியை அவர் எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது என்றே கூறலாம்.
கதிரவன் பேட்டி
பிக் பாஸ் வீட்டை வைத்து வெளிய வந்த கதிரவன் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் அவரிடம் தொகுப்பாளர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றது எதற்காக என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த ” நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது டைட்டிலை ஜெயிக்கிறது இல்ல. பணப்பெட்டி வைத்தால் அதனை எடுத்துக்கொண்டு வெளிய வந்துவிட வேண்டும் என்றும் முன்பே செய்து வைத்திருந்தேன்.
நான் நினைத்தது போலவே பணப்பெட்டியை வைத்தார்கள். எனவே பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். நான் வீட்டை விட்டு வெளியேறும் போது என்னை வழியனுப்ப ஜனனி, ஏடிகே தவிர எல்லாரும் மொத்தமாக இருந்தார்கள் அது ரொம்பவே சந்தோசமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து தொகுப்பாளர் வெற்றியாளரா யாராக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள்..? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கதிரவன் ” பிக் பாஸ் வீட்டில் எல்லாருமே நன்றாக தான் விளையாடினார்கள். நான் ஷிவின் தான் வெற்றியாளராக வேண்டும் என்று நினைத்தேன். எனவே அவுங்க வெற்றிபெற்றிருந்தால் சேர்ந்து கொண்டடிருக்கலாம்” என தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் இறுதி போட்டியில் அசீம் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…