விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளர் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பிரியங்கா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் சுற்றுலா செல்லும் வீடியோக்கள், நகைச்சுவையான வீடியோக்கள் என தனது பிடித்ததை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மலேஷியாவிற்கு சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- யாரு சாமி நீ… லவ் டுடே பிரதீப்பை அலேக்காக தூக்கி கொண்டாடி தீர்த்த ரசிகர்… வைரலாகும் வீடியோ..!
வீடியோவில் மலேஷியா மக்கள் அனைவரும் அன்பால் பிரியங்காவை நெகிழ வைத்துள்ளார்கள். மக்கள் அவரை அன்பாக வரவழைத்து புகைப்படம் எடுத்து கையில் மோதிரம் போட்டுவிட்டு பாசமாக பார்த்துள்ளார்கள். இதனால் நெகிழ்ந்து போன பிரியங்கா உருக்கமாக பேசியுள்ளார்.
அதில் ” இந்த மக்கள் எதற்காக என்மீது இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன செய்தேன்? இந்த அன்புகளை பார்ப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதே தவறு என நினைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு நல்ல ஆதரவு கொடுத்தது மலேஷியா மக்கள் தான் என்பதை கண்டு நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன்.
என்னை பார்த்ததும் அவர்கள் கையசைத்தது, எனக்கு வாழ்த்து தெரிவித்தது எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. மலேசியா மக்களுக்கு ரொம்ப நன்றி. எல்லாரும் சந்தோசமாக இருப்போம் என கண்ணீருடன் பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…