நடிக்க மாட்டேன்னு பையன் மேல சத்தியம் ! ஷாக்கிங் கொடுத்த விஜய் சேதுபதி.!
![Vijay Sethupathi_Son [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/03/Vijay-Sethupathi_Son-file-image.webp)
Vijay Sethupathi : தமிழ் நடிகர்களில் விஜய் சேதுபதி, தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி சென்று கொண்டிருக்கிறார். தற்போது அவரை சினிமா விகடன் யூடுப் சேனலில் அளித்த பேட்டியில் மனம் உருக பேசியது, அவரது ரசிகர்கள் இடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய் சேதுபதி மிக விரைவில் தனது 50-வது படமான ‘மகாராஜா’ எனும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கி வருகிறார்.
Read More :- 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா.!
தற்போது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனியார் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் பேசிய அவர், ” எனது மனைவி, அப்போது 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். ஒரு முறை ரோட்டில் வைத்து இனி நான் நடிக்க செல்ல மாட்டேன், எந்த ஒரு ஆடிஷனுக்கும் போக மாட்டேன் என மனைவியின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன். ஆனால் அதன் பிறகு இப்படி வளர்ச்சி அடைந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
சிறு வயதில் எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும், அந்த கனவில் நான் ஏதோ மேடையில் இருப்பதும், என்னை சுற்றி கூட்டம் இருப்பதும் போல கனவு கண்டிருக்கிறேன். அது நிஜமாகும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை, ஆனால் இன்று நான் இப்போது ஒரு பெரிய இடத்தில் இருக்கிறேன். நான் கடந்து வந்த பாதையை நினைத்து பார்த்தால் எனக்கு வார்த்தைகள் இல்லை. என் முகம் தமிழ் திரை உலகிற்கு மட்டும் தான் தாக்கு புடிக்கும் என்று நடிகர் மணிகண்டனிடம் கூட ஒரு முறை கூறி இருக்கிறேன்.
Read More :- ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!
தற்போது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற எல்லா திரை உலகில் நடித்ததும், அந்த அந்த திரை உலக ரசிகர்களுக்கும் என்னை பிடித்தது எல்லாமே ஒரு பெரிய ஆச்சர்யம் தான். நாம் ஒரு பாதையை தேர்வு செய்து நன்றாக உழைத்தோம் என்றால் அந்த பாதையில் கிடைக்கும் அனுபவம் நாம் போய் சேரும் இடத்தை மாற்றி விடும்”, என்று தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி கூறி இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025