நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்வி கொள்கை குறித்த தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,”புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லாரும் ஆதரிக்கக் கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளின் தரம் இன்னும் அதிகமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
,
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…