“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!
துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ள நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். அதன்படி, தற்பொழுது தன்னுடைய விருப்ப விளையாட்டான கார் ரேஸிங் பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அட ஆமாங்க.. நடிகர் அஜித் குமார் இப்பொது துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸில் கலந்துகொண்டுள்ளார்.
சமீபத்தில், கூட அஜித் கார் ரேஸிங் பயிற்சியின் போது, பயங்கரமான விபத்தில் சிக்கினார். ஆனால், சிறிய காயம் கூட ஏற்படாமல் தப்பினார். இந்நிலையில், துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் பங்கேற்று உள்ள அஜித், பொது வெளியில் எதைப் பற்றியும் வாய் திறக்காமல் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், தன்னுடைய கார் ரேசிங் அனுபவம் குறித்தும், தனது சினிமா கெரியர் குறித்தம் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அஜித்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரேஸ் பயிற்சிக்கு இடையே அவர் அளித்த பேட்டியில், “கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். 18 வயதில் ரேஸிங் தொடங்கினேன். அதன் பின் சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010-ஆம் ஆண்டு EUROPEAN-2 இல் களமிறங்கினேன், பின்னர் பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராகவும் வந்துள்ளேன்.
கார் ரேஸ் தொடர் முடியும் வரை 9 மாதங்கள், தான் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். ரேஸ் முடிந்த பின்னரே திரைப்படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறினார். கடந்தமுறை சினிமா காரணமாக கார் ரேஸில் கவனம் செலுத்த முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
The Most Awaited THALA #AjithKumar Sir’s Interview Speech About His Racing Carrer Is Here! 😎🔥#AjithKumarRacing pic.twitter.com/0YajsqSkZo
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 10, 2025