பதட்டத்துல பேசிட்டேன்! ‘அப்பா வேற நான் வேற’ ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த சூர்யா சேதுபதி!
![vijay sethupathi son](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/06/vijay-sethupathi-son.webp)
சூர்யா சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் ஹீரோவாக ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெளியான சமயத்தில் சூர்யா சேதுபதி பேசிய விஷயம் ட்ரோலுக்கு உள்ளானது. அப்பா பெயரில் நான் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை அப்பா வேற நான் வேற என கூறியிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய அப்பா இல்லை என்றால் உங்களுடைய பெயர் யாருக்கும் தெரியாது முதலில் சரியாக பேச கற்றுக்கொள்ளுங்கள் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். மேலும், சிலர் அப்பா வேற நான் வேற என்று அவர் கூறியதை வைத்து ட்ரோலும் தொடர்ச்சியாக செய்து வந்தனர். இதனையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூர்யா சேதுபதி பேசியுள்ளார்.
அவர் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதனையடுத்து, அப்பா பெயரில் வரவேண்டாம் என்று நினைத்துவிட்டு எதற்காக விழாவிற்கு அப்பாவை அழைத்துள்ளார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சூர்யா சேதுபதி ” இன்று தந்தையார் தினம் என்பதால் நான் அப்பாவுக்கு பரிசாக எதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.
எனவே, நான் நடித்துள்ள இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்பதற்காக அழைத்து வந்தேன். அப்பா மட்டும் இல்லை என்னுடைய குடும்பத்தில் இருந்து அனைவரையும் அழைத்துள்ளேன். முன்னதாக அப்பா வேறு நான் வேறு என்று சொன்னதற்கு நான் விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நான் இதற்கு முன்னதாக பெரிதாக மேடைகளில் பேசியது இல்லை.
எனவே, பதட்டம் அதிகமாக இருந்தது. முதல் முதலாக ஒரு பேட்டியில் பேசுகிறோம் என்று பதட்டத்தில் பேசிவிட்டேன். மற்றபடி, நான் சீரிஸ் ஆக பேசவில்லை. நான் ஜாலியான ஒரு ஆள்” என கூறியுள்ளார். மேலும். இவர் நடித்துள்ள இந்த ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தினை இயக்குனர் அனல் அரசு இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)
சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!
February 12, 2025![RohitSharma](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/RohitSharma.webp)
INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!
February 12, 2025![INDvENG 3rd ODI ENG won the toss](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/INDvENG-3rd-ODI-ENG-won-the-toss.webp)