இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’. கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் மிஷ்கின், ரமணா, நடிகர்கள் அருண் விஜய், விஜயகுமார், தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின் ” இந்த நிகழ்ச்சி ஒரு சினிமா நிகழ்ச்சி மாதிரியே இல்லை. குடும்ப நிகழ்ச்சி மாதிரி இருக்கு. விழாவில் வந்திருந்த போனி கபூரை மேற்கோள்காட்டி, “போனி கபூர் யார் என்றே தெரியாது, ஸ்ரீதேவியை தெரியும் அவரை ரசித்திருக்கிறேன்.
தற்போது அவரை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த இரண்டு நாளைக்கு முன்பு ‘டைனோசர்ஸ்’ படக்குழு என்னை பார்க்க வந்தார்கள். அப்போவே படம் ஹிட் என்று தெரிந்து விட்டது. ஏனென்றால், நான் என்னுடைய முதல் படம் எடுக்கும்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 சிகரெட் குடிப்பேன்.
அஞ்சாதே படம் சமயத்தில் 120 சிகெரெட் குடித்தேன். அப்படி எப்போது டென்ஷன் ஆக இருந்தால் மட்டும் தான் அவர் தான் இயக்குநர். டைனோசர்ஸ் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என கூறியுள்ளார். மேலும் மிஷ்கின் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…