நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகர்களில் மிகவும் பிடித்தவர்களுக்கு வெளியே தெரியாமலே பல உதவிகளை செய்த தகவலை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இறப்பதற்கு முன்பு கமல்ஹாசன் செய்த உதவிகளை பற்றி பேசி இருந்தார்.
இவர் கமல்ஹாசனுடன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.சிவாஜிகாக மருத்துவ செலவு மற்றும் அவருக்கு மாதம் மாதம் தேவையான மருந்துகளை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி வந்து கொண்டிருந்தார். இதனை நெகிழ்ச்சியுடன் ஆர்.எஸ்.சிவாஜி இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவரை போலவே, கமல்ஹாசனுடன் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் நட்பாக இருந்தவர் நடிகர் காமெடி நடிகர் லிவிங்ஸ்டன். இவர் கமலுடன் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரை கமலுக்கு மிகவும் பிடிக்குமாம். தன்னுடைய வீட்டில் எதாவது நிகழ்ச்சி அல்லது நல்ல விஷயம் நடந்தாலும் கூட லிவிங்ஸ்டனை விருந்திற்காக அழைப்பாராம்.
அது மட்டுமின்றி அடிக்கடி லிவிங்ஸ்டன் வீட்டிற்கு கால் செய்து நலம் விசாரித்து விட்டு வீட்டிற்கு அழைப்பாராம். ஆனால், அந்த சமயம் பொறுப்பற்ற தன்மை காரணமாக லிவிங்ஸ்டன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். வீட்டிற்கு அழைத்தாலும் அந்த சமயம் பெரிதாக லிவிங்ஸ்டன் இதை பற்றி யோசித்தது இல்லயாம். அதனை நினைத்து தான் இப்போது மிகவும் வருத்தப்படுவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” கமல் சாருடைய நட்பு எனக்கு ஆரம்ப காலத்தில் கிடைத்தது. ஆனால், அந்த சமயத்தில் இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த நட்பு எனக்கு இப்போது இருந்திருந்தால் நான் மிகவும் சந்தோஷமாக இருந்திருப்பேன். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும் மனிதரில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். ஒருவரை வைத்து எதாவது காரியம் ஆகுற வரைக்கும் நட்பு வைக்கிற ஆள் வரு இல்ல.
அவருடைய குணமே வேறே. ஒரு வருடம் பழகினால் உண்மையாக பழகுவார் . என்னுடைய அலட்சியம் காரணமாகவே நான் அவருடன் உள்ள நட்பை கெடுத்துவிட்டேன். அதனை இப்போது நினைத்து பார்க்கும் போது மிகவும் வருத்தப்படுகிறேன். இப்போது நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என லிவிங்ஸ்டன் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…