50 படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்! அசால்ட்டாக சொன்ன 7ஜி ரெயின்போ காலனி ஹீரோ!
சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் தாங்கள் நடித்த முதல் திரைப்படத்திலே பிரபலமாகி மக்களின் மனதில் இடம் பிடிப்பது உண்டு. அப்படி ஒரு நடிகர் தான் “7ஜி ரெயின்போ காலனி ” படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா. இந்த திரைப்படத்தில் கதிர் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரவி கிருஷ்ணா மிகவும் பிரபலமானார்.
இந்த படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன், கேடி, நேற்று இன்று நாள், காதல்னா சும்மா இல்லை உள்ளிட்ட படங்கள் மற்றும் விஜய் நடித்த சுக்ரன் திரைப்படத்திலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இவருக்கு 7 ஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல எந்த படத்திற்கும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. ஆனால், இந்த திரைப்படத்திற்கு பிறகு ரவி கிருஷ்ணா எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அந்த சமயத்தில் இருந்தே ரவி கிருஷ்ணாவுக்கு நடிக்க ஆர்வம் இல்லையா அல்லது பட வாய்ப்புகள் வரவில்லையா என கேள்வி எழுப்பினார்கள்.
இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரவி கிருஷ்ணா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன்படி, அவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் “7ஜி ரெயின்போ காலனி 2 ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், எதற்காக இத்தனை ஆண்டுகள் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.
அப்பா சம்பாதிக்கிறாரு நாம ஏன் நடிக்கணும்? கோடியில் புரளும் 7 ஜி ஹீரோ!
கிட்டத்தட்ட ரவி கிருஷ்ணா 50 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் மறுத்து இருக்கிறாராம். படத்தின் கதை அருமையாக இருந்தும் சில காரணங்களால் திரைப்படங்களில் நடிக்கவில்லையாம். அவர் நடிக்காமல் விட்ட அணைத்து படங்களுமே எடுக்கப்படும் இருக்கிறதாம். அதில் சில திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளதாம்.
ஆரண்ய காண்டம் திரைப்படத்தில் கூட முதலில் நடிக்க யோசித்தாராம். பிறகு கதைப்படி தன்னை சுற்றி எல்லாரும் கெட்டவர்கள் தான் மட்டும் நல்லவன் என்பதால் அந்த படத்தில் நடித்ததாகவும் பேட்டியில் ரவி கிருஷ்ணா கூறியுள்ளார். மேலும் பல படங்களில் நடிக்க மறுத்த காரணத்தால் இப்போது வருத்தப்படுவதாகவும், இனிமேல் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பேன் என்றும் ரவி கிருஷ்ணா கூறியுள்ளார்.