நடிகர் விஜய் சேதுபதி தற்போது “DSP” எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஷாருக்கானுக்கு வில்லனாக “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தி வசனத்தை 100 முறை படிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- எந்தெந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர் தெரியுமா..?
இது குறித்து பேசிய அவர் ” இந்தியில் 5 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். ‘மாநகரம்’ படத்தில் முனீஸ்காந்த் செய்த ரோலை ‘மும்பைகர்’ படத்தில் செய்கிறேன். கத்ரீனா கைஃபுடன் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன். மற்றோரு படம் ஷாகித் கபூரோட செய்கிறேன்.
அதைப்போல ‘காந்தி டாக்ஸ்” என ஒரு மௌனப் படம் செய்யறேன். இந்த படங்கள் இந்தி படங்கள். இந்த படங்களின் வசனங்களை பேச கொஞ்சம் சிரமமாக இருக்கும். நம்ம மூளை தமிழில்தான் வேகமாகச் சிந்திக்கும். அப்படியே இந்தியிலும் சிந்திக்க முயற்சி எடுக்கிறேன். இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்” என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…