சென்னை: கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக எழுந்த விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி கொடுத்துள்ளார்.
கலக்கு போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற பெயருடன் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.
இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும்மல்ல, அவர் தற்போது மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். ஆம், தான் சம்பாதிக்கும் வருமானத்தில் பாதியை ஏழைகளுக்கு செலவு செய்து உதவி வருகிறார். இவ்வாறு தனியாக உதவி வந்த kpy பாலா, அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இருவரும் இணைந்து தற்பொழுது பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பாலா, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அப்பொழுது, ஒருவர் தான் உதவி செய்த வீடியோ ஒன்றில் கமெண்ட்ஸ் செய்திருந்தார். அதில், இத்தனை உதவிகளை வழங்கி வரும் இவர், யாருடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார் என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, அது மாதிரியான பணத்தில் நான் செலவு பண்ணல், வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில்தான் மக்களுக்கு உதவி செய்கிறேன்” என்று கூறினார். மேலும், எனக்கு பின்னாடி உதவி செய்யும் ஒரே நபர் அது ராகவா லாரன்ஸ் சார் மட்டும் தான் என கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…