தமிழில் ஒரு காலத்தில் கலக்கி வந்த நடிகை பாவனா திருமணம் செய்து கொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார் என்றே கூறலாம். அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கேரளத்தைச் சேர்ந்த இவர் தற்போது “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனாவிற்கு துபாய் நாட்டின் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இ.சி.ஹெச் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் நடந்த இந்த கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகை பாவனா வெள்ள நிற டாப் அணிந்து சென்றிருந்தார்.
இதையும் படியுங்களேன்- எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதான்னு போராடிட்டு இருக்கேன்…. கதறி கண்ணீர் விடும் அதர்வா பட நடிகை.!
அப்போது எடுக்கப்பட்ட பாவனாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாவனா டாப் மட்டும் அணிந்து வந்ததாகவும், அதனால் கையை உயர்த்தும்போது அவரது உடல் தெரிந்ததாகவும் விமர்சனங்களை வைத்தனர்.
அதற்கு விளக்கம் தரும் வகையில், நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ” நான் வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே செல்லும் நபர் இல்லை. என்னுடைய சருமத்தின் நிறத்தில் உள்ளே ஆடை அணிந்திருந்தேன். மற்றபடி சில குறிப்பிடுவது போல நான் ஆடைக்கு உள்ளே (ஸ்கின் ட்ரெஸ் ) இல்லாமல் ஆடை அணியவில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இது தெரியும். நான் ஒன்னும் புதுசா கண்டுபிடிக்கவில்லை”
எல்லாம் சரியாகிவிடும் என்று தினமும் சொல்லிக் கொண்டு வாழ முயலும் போது, என் அன்புக்குரியவர்களைக் கவலைப் படாமல், துக்கங்களை ஒதுக்கித் தள்ள முயலும் போது, என்னைக் காயப்படுத்தி இருட்டில் விடுபவர்கள் ஏராளம் என்பது எனக்குத் தெரியும். மீண்டும் நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளால் என்னை விமர்சிக்கவும். இப்படித்தான் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படித்தான் உனக்கு சந்தோஷம் கிடைத்தால் நான் தடையாக இருக்க மாட்டேன்.” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…