அந்த சான்ஸை நான் மிஸ் பண்ணிட்டேனே !நடிகை பிரியா பவானி சங்கரின் சோகமான பதிவு !
“கல்யாணம் முதல் காதல் வரை ” சீரியலில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்நிலையில் இவர் சீரியல் நடிப்பதை விட்டு விட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான “மான்ஸ்டர்” படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.இந்த படத்தில் இவர் எஸ்.ஜெ சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் தற்போது வெற்றிகரமான திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழு தற்போது வெற்றிவிழா கொண்டாடி இருக்கிறார்கள்.அந்த விழாவின் பொது எடுக்க பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு நடிகை பிரியா பவானி சங்கர் என்னால் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று சோகமாக கூறியுள்ளார்.
Sending love and regards to all ???? my bad I couldn’t make it ????????♀️ https://t.co/4JmaCzP8va
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 26, 2019