“மணிமேகலையை மிஸ் பண்றேன்”…செஃப் தாமு எமோஷனல்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு மணிமேகலையை மிஸ் செய்வதாக செஃப் தாமு எமோஷனலாக பேசியுள்ளார்.
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி ஒரு வழியாக நிறைவடைந்த நிலையில், டைட்டிலை பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரியங்கா வென்றார். அது என்ன சர்ச்சை என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். நிகழ்ச்சியில் , மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதாக மணிமேகலை குற்றச்சாட்டு வைத்தது தான் பிரியங்காவை பிரச்சினையில் கொண்டுபோய்விட்டது.
ஒரு பக்கம் சர்ச்சையாக வெடித்த காரணத்தால் என்னவோ, குக் வித் கோமாளி நிகழ்ச்சியைச் சிலர் வெறுக்கவும் செய்து நிகழ்ச்சியைப் பார்ப்பதை நிறுத்தியாகவும் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து இருந்தார்கள். இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே, மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால் அவர் இல்லாமலே இறுதி எபிஷோட் நடந்தது.
இறுதி எபிசோடில் ரக்சன் மட்டும் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிரபலங்கள் பலரும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி பற்றி பேசினார்கள். அப்போது, நிகழ்ச்சியின் நடுவர் செஃப் தாமு மணிமேகலை மீது வைத்து இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் பேசியதாவது” நிகழ்ச்சியை இந்த அளவுக்குக் கலகலப்பாக முக்கிய காரணம் ரக்சன் மற்றும் மணிமேகலை தான். இந்த நேரத்தில் நான் மணிமேகலையை மிகவும் மிஸ் செய்கிறேன். ரக்சன் இன்னும் பெரிய இடத்திற்குப் போகவேண்டும்” என நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துப் சற்று எமோஷனலாக பேசியிருந்தார்.
பிரியங்கா பிரச்சினையில் செஃப் தாமு எதுவும் பேசாமல் இருந்த காரணத்தால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. அதாவது அவரும் பிரியங்காவுக்கு ஆதரவாக தான் இருக்கிறார் போல எனப் பலரும் பேசினார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை மணிமேகலை தனது மகள் போல் தான் என மனதில் வைத்து செஃப் தாமு அவரை பற்றி நிகழ்ச்சியில் பேசியுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.