தமிழ் சினிமாவின் மீது எனக்கு அதிகமான அன்பு இருக்கிறது !!!நடிகை மஞ்சுநாத்
- இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தில் நடிகை மஞ்சநாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- செய்தியாளர் சந்திப்பின் போது நடிகைமஞ்சுநாத் பேசுகையில் “தமிழ் சினிமா மீது எனக்கு அதிகமான அன்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
நடிகை மஞ்சுநாத் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் “காளி” திரைபடத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்” படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ்கல்யாண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் பாலசரவணன்,மா.க.பா.ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் மார்ச்15ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகைமஞ்சுநாத் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ் சினிமா மீது எனக்கு அதிகமான அன்பு உள்ளது. மேலும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’’ என்று நடிகை மஞ்சுநாத் கூறியுள்ளார்.