Raju Murugan [File Image]
கஞ்சா பழக்கம் தனக்கு இருந்ததாகவும், பொதுச் சமூகத்திற்கு பயப்படுவதை விட மிக மோசமான செயல் வேறு எதுவும் இல்லை என சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.
ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு 10ஆம் திரைக்கு வந்தது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜப்பான் திரைப்படம் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பது பற்றி பார்த்தால், தொடக்க நாளிலியே நெகடிவ் விமர்சனங்களை பெற்று, எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றே சொல்லலாம்.
சமீபத்தில், ஜப்பான் படத்தின் இயக்குநர் ராஜூமுருகன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னிடம் இருந்த கெட்டப்பழக்கங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
போட்ட பணம் திரும்ப வருமா.? ஏக்கத்தில் ஜப்பான் தயாரிப்பாளர்.! 4 நாள் வசூல் இவ்வளவு தான்…
இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஆம், நான் கஞ்சா அடித்திருக்கிறேன். பொதுச் சமூகத்திற்கு பயப்படுவதை விட மிக மோசமான செயல் வேறு எதுவும் இல்லை. பொதுச் சமூகம் என்பதே பல இதயங்களால் கட்டமைக்கப்பட்டது தான், தவறு என்பதே சித்தரிப்பு தான்” என பிரபல ஊடகமான கலாட்டா சேனலுக்கு பேசியுள்ளார்.
வசூல் வேட்டையில் களமிறங்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்…4 நாளில் எத்தனை கோடி தெரியுமா?
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…