“எனக்கு சாதி வெறி கிடையாது”… இயக்குனர் கெளதம் மேனன் காட்டம்…!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “கெளதம் வாசுதேவ் மேனன்” என பெயர் மாற்றியதற்கு பின்னால் சாதி வெறி கிடையாது என விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “எனக்கு பிறக்கும் போதே வைத்த பெயர் கெளதம் வாசுதேவ் மேனன்தான். “மின்னலே” படம் வெளியாகும் போது டைட்டிலில் எனது முழுப் பெயரை பதிவிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் பெயர் பெரிதாக இருந்ததால் தயாரிப்பாளர்தான் சுருக்கமாக வைத்துக்கொள்ள சொன்னார். பச்சைக்கிளி முத்துச்சரம் படம்வரை இது தொடர்ந்தது.
பிறகு ” வாரணம் ஆயிரம்” படத்தின் அனைத்து உரிமமும் என்னிடம் இருந்தது. அந்தப் படம் எனது தந்தையை குறித்த காட்சிகள் உள்ள எனக்கு ஸ்பெஷலான படம் என்பதால் அதில் இருந்து “கெளதம் வாசுதேவ் மேனன்” என எனது முழுப்பெயரை போட்டுக்கொண்டேன்.
இதையும் படியுங்களேன்- நான் அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருப்பேன்…இயக்குனர் ஹரி அதிரடி பேச்சு.!
வெளியில் சொல்வது போல் எனக்கு சாதி வெறி போன்ற கேவலமான எண்ணங்கள் கிடையாது. என் தந்தை மலையாளி தாய் தமிழ். என் மனைவி கிறிஸ்டியன். அதனால் எனது குடும்பத்தில் சாதி வெறி கிடையாது” என்று கோபத்துடன் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் கெளதம் மேனன்.