என் வாழ்க்கையில் நான் தனிமையில் வசித்ததே இல்லை! கவலை தெரிவித்த பிரபல நடிகை!

Default Image

கொரோனாவால் தனிமையில் உள்ள நடிகை ஸ்வேதா பாசு, மனநல மருத்துவரிடம் சிகிச்சை.

இந்தியா முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும், பிரபலங்கள் முதல் பாமர மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி தான் உள்ளது.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் இந்தி இயக்குனர் ரோகித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு வருடத்திலேயே விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் தனிமையில் வசித்து வருகிறார். தற்போது கொரோனாவால் ஸ்வேதா பாசு குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் 25 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே தனிமையில் முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்ட நிலையில், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு, மனநல மருத்துவரிடம் வீடியோ மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நடிகை ஸ்வேதா அவர்கள் கூறுகையில், ‘வாழ்க்கையில் தனிமையில் நான் வசித்தது இல்லை. ஆரம்பத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடனும் பிறகு கணவருடனும் இருந்தேன். விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வருகிறேன். இப்போது கொரோனா ஊரடங்கும் வந்து விட்டது. இதனால் மனநல மருத்துவரிடம் வீடியோ மூலம் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் என்னைப்போல் பலர் மனநல சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அந்த மருத்துவர் சொன்னார், அவர் சிகிச்சை பெற்ற மருத்துவர் கூறியதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மன ஆரோக்கியம் முக்கியம். கொரோனா ஊரடங்கில் அனைவரும் மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு அம்மா என்னை பார்க்க வந்தார். அவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை. கொரோனாவால் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசினோம். கடினமான கொரோனா பிரச்சினை விரைவில் கடந்து செல்ல பிரார்த்திக்கிறேன்.’ என மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்