நான் என் வாழ்க்கையில் எதையுமே மறைத்தவனே கிடையாது – டி.ராஜேந்தர்
நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன் தான் டி.ராஜேந்தர் பேட்டி.
டி.ராஜேந்தர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்த இடைப்பட்ட நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் என்னை பற்றிய என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இந்த நிலைக்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன் தான். என்னுடைய தன்னம்பிக்கையை மீறிய எனது கடவுள் நம்பிக்கை தான் எனக்கு பல காலகட்டத்தில் ஊடகங்கள் கை கொடுத்து உள்ளது. நான் இப்போதுதான் வெளி நாட்டிற்கு உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளேன். நான் எதையுமே வாழ்க்கையில் மறைத்தவன் கிடையாது. இப்போதுதான் விமான நிலையம் வந்தேன். அதற்குள் அமெரிக்கா சென்று விட்டதாக தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.