கோபத்தால் நிறைய இழந்திருக்கிறேன்…மேடையில் எமோஷனலான ஐஸ்வர்யா ராஜேஷ்.!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” சொப்பன சுந்தரி ” என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்க காரணம் உள்ளது.நீங்கள் படம் பார்க்கும் போது அது உங்களுக்கு தெரியும்.
மேலும், கண்டிப்பாக நீங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு திருக்குறளின் முழுமையான விளக்கத்தை முழுவதுமாக தெரிந்து கொள்வார்கள். நான் ஒரு கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் மட்டும் தான்.
இந்த படத்தில் என்னை ஹீரோயினாக வைத்து எடுக்கமாட்டேன் என இயக்குநர் சார்லஸ் கோபத்துடன் சென்றுவிட்டார். அதன்பின் அவரை அழைத்து கோபத்தால், எதுவும் நடக்காது. கோபத்தால் நான் நிறைய இழந்திருக்கிறேன் என்றேன். அதன்பின் இருவரும் படத்தில் ஒன்றாக பயணித்தோம்” என கூறியுள்ளார்.