நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகரான கமலஹாசனின் மகளாவார். இவர் பிரபலமான பாடகரும் இசையமைப்பாளருமாவார். இவர் தமிழில் 7-ம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.
இவர் லண்டனை சேர்ந்த நடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இதனிடையில் இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சமூக வலைதளப்பாக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ நான் திரையுலகில் ஒரு நடிகையாக பத்தாண்டுகளை நிறைவு செய்கிறேன். நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கடினமாக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் சிறப்பாக செயல்பட்டு என்னை ஆதரிக்கும் அனைவரையும் பெருமையடைய செய்வேன். நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும் நிறைய மாறிவிட்டேன். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…