‘என்கிட்ட நிறைய செருப்பு இருக்கு’..விஷாலை வறுத்தெடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி!

sri reddy about vishal

சென்னை : நடிகை ஸ்ரீ ரெட்டி யாருனே தெரியாது என விஷால் கூறிய நிலையில், நீ பெரிய பிராடு என்று உலகத்துக்குகே தெரியும் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

விஷால் பேச்சு

நடிகர் விஷால் சமீபத்தில் தனது 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினார்.உணவு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் மலையாள சினிமாவில் நடிகைக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிப் பேசினார். இது குறித்துப் பேசியிருந்த அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைத்து இப்படிச் செய்கிறார்கள். யாராவது வந்து உங்களை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் அவர் யாராக இருந்தாலும் சரி, முதலில் அப்படிக் கேட்பவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என மிகவும் ஆவேசத்துடன் கூறியிருந்தார்.

ஸ்ரீ ரெட்டி பற்றி…

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் மீது குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருந்தார். அதனைப் பற்றி நீங்கள் சொல்வதென்ன எனச் செய்தியாளர்கள் கேட்க, அதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் பதில் அளித்த விஷால் ” நடிகை ஸ்ரீ ரெட்டி யார் என்றே எனக்குத் தெரியாது. அவர்கள் செய்த சேட்டை மட்டும் தான் எனக்குத் தெரியும். உண்மை தெரியாமல் என்னுடைய மீது குற்றம்சாட்டுவது தவறான ஒரு செயல்” எனக் கூறியிருந்தார்.

விஷாலை விமர்சித்த ஸ்ரீ ரெட்டி 

விஷால் பேசியதைப் பார்த்துக் கடுப்பான நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னுடைய சமூக வலைத்தள அவரை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். விஷால் பற்றி அவர் கூறியிருப்பதாவது” விஷால் நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசும்போது, ​​உங்கள் நாக்கு ஊடகங்கள் முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு பேசவேண்டும்.

உலகத்துக்கே தெரியுமே நீ எவ்வளவோ பெரிய பிராடு என்று. இவ்வளவு உதாரணங்களை ஊடகங்களுக்கு முன்னால் சொல்லிவிட்டு உங்களை மரியாதைக்குரியவன் என்று நினைக்காதே.உங்கள் வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உங்களை விட்டுச் சென்றது ஏன்??உங்கள் நிச்சயதார்த்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது?இந்த கேள்விக்கு அடுத்த முறைப் பதில் சொல்லுங்கள். என்னிடம் நிறையச் செருப்புகள் உள்ளது. உனக்கு வேண்டுமா?” எனவும் கடும் கோபத்துடன் விஷால் பேசியதற்கு ஸ்ரீ ரெட்டி பதில் அளித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டி ஒரு பைத்தியம் – விஷால்

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஷால் ஸ்ரீ ரெட்டி பைத்தியக்காரத்தனமாக தன் மீது குற்றச்சாட்டு வைத்ததாகத் தெரிவித்தார். இது பற்றிப் பேசிய அவர் ” முதல் முறையாக என்னுடைய பெயரைச் சொல்லி என்னைக் குற்றச்சாட்டில் இழுத்துவிட்டது ஸ்ரீ ரெட்டி தான். அவர் பைத்தியக்காரித் தனமாக என்னுடைய பெயரைச் சொல்லியிருந்தார். அதன்பிறகு, மன்னிப்புக்கேட்டு என் மீது புகார் வைத்தார். நடிகர் சங்கம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஸ்ரீ ரெட்டி புகார் செய்தார். சினிமாவில் இருக்கும் பிரபலத்தின் பெயரைக் கெடுக்கவேண்டும் என்றால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம் என்பதற்காகத் தான் ஸ்ரீ ரெட்டி இப்படிச் செய்ததாகவும் விஷால் சூசகமாகத் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested