எனக்கு தலைக்கனமா…? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இசைஞானி இளையராஜா.!!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் இளையராஜா பல ஆண்டுகளாக சினிமாத்துறையில், இசையமைத்து வருகிறார். பலரும் இளையராஜாவுக்கு தலைக்கனம் அதிகமாக இருக்கிறது என விமர்சனங்கள் செய்வது உண்டு. குறிப்பாக சமீபத்தில் கூட சக இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

Ilaiyaraaja [Image source : file image ]

மேலும், இளையராஜா சமீபத்தில் மறைந்த காமெடி நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். வீடியோவில் ‘ஆரம்ப காலகட்டத்தில் கோடம்பாக்கம் பக்கத்தில் எனக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களின் மனோபாலாவும் ஒருவர். அவருடைய மறைவு வேதனையாக இருக்கிறது என கூறியிருந்தார்.  அந்த வீடியோவை பார்த்த பலரும் இது இரங்கல் தெரிவிப்பது போல இல்லை என்பது போல  விமர்சித்தனர்.  இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசியுள்ளார்.

Ilaiyaraaja [Image source : twitter/ @ilaiyaraaja
]

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா ” பொதுவாகவே நான் இசையமைக்கும்போது என்னுடைய இசையுடன் போட்டியிடுவேன். மற்றபடி மற்றவர்கள் சொல்வது போல எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு அதிகமாக தலைக்கனம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். நான் தலைக்கனம் கொண்டவன் என்றால் அப்படி சொல்பவனுக்கு எவ்வளவு தலைக்கனம் இருக்கும்.

Ilaiyaraaja [Image source : twitter/ @ilaiyaraaja
]

நான் தூக்கி எறிந்து பேசுகிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம். எனக்கான கேள்விக்கு நான் தான் பேசவேண்டும். எனவே, நான் பேசுவதை நீங்கள் தலைக்கணம் என்று கூறினாலும் சரி  எனக்கு இது பற்றியெல்லாம் கவலை இல்லை நான் என்னுடைய இசைப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன்” என விளக்கம் கொடுத்துள்ளார்.

Ilaiyaraaja [Image source : twitter/ @ilaiyaraaja
]

விமர்சனங்களுக்கு இளையராஜா பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய ரசிகர்கள் பலரும்  நெத்தியடியாக பதிலடி கொடுத்தீர்கள் எனவும் ஹேட்டர்ஸ்களுக்கு தரமான பதிலடி எனவும் கருத்துக்களை கூறி  வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

5 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

20 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

48 minutes ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

அத்திவரதர் 40 வருடங்கள் நீரில் மூழ்கி இருக்க காரணம் என்ன தெரியுமா.?

40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை  தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…

2 hours ago