எனக்கு தலைக்கனமா…? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த இசைஞானி இளையராஜா.!!
இசையமைப்பாளர் இளையராஜா பல ஆண்டுகளாக சினிமாத்துறையில், இசையமைத்து வருகிறார். பலரும் இளையராஜாவுக்கு தலைக்கனம் அதிகமாக இருக்கிறது என விமர்சனங்கள் செய்வது உண்டு. குறிப்பாக சமீபத்தில் கூட சக இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.
மேலும், இளையராஜா சமீபத்தில் மறைந்த காமெடி நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்து சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார். வீடியோவில் ‘ஆரம்ப காலகட்டத்தில் கோடம்பாக்கம் பக்கத்தில் எனக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களின் மனோபாலாவும் ஒருவர். அவருடைய மறைவு வேதனையாக இருக்கிறது என கூறியிருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இது இரங்கல் தெரிவிப்பது போல இல்லை என்பது போல விமர்சித்தனர். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா ” பொதுவாகவே நான் இசையமைக்கும்போது என்னுடைய இசையுடன் போட்டியிடுவேன். மற்றபடி மற்றவர்கள் சொல்வது போல எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு அதிகமாக தலைக்கனம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். நான் தலைக்கனம் கொண்டவன் என்றால் அப்படி சொல்பவனுக்கு எவ்வளவு தலைக்கனம் இருக்கும்.
நான் தூக்கி எறிந்து பேசுகிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம். எனக்கான கேள்விக்கு நான் தான் பேசவேண்டும். எனவே, நான் பேசுவதை நீங்கள் தலைக்கணம் என்று கூறினாலும் சரி எனக்கு இது பற்றியெல்லாம் கவலை இல்லை நான் என்னுடைய இசைப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன்” என விளக்கம் கொடுத்துள்ளார்.
விமர்சனங்களுக்கு இளையராஜா பதிலடி கொடுத்துள்ள நிலையில், அவருடைய ரசிகர்கள் பலரும் நெத்தியடியாக பதிலடி கொடுத்தீர்கள் எனவும் ஹேட்டர்ஸ்களுக்கு தரமான பதிலடி எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.